இலங்கையின் ஆதிவாசிகள் நாடாளுமன்றம் சென்றுள்ளனர்.
வேடுவர் இனம் அல்லது ஆதிவாசிகள் மிக மோசமாக அழிவடைந்து செல்வதாகத் தெரிவித்து ஆதிவாசித் தலைவர்கள் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் நேற்று மகஜர் ஒன்றை ஒப்படைத்துள்ளனர்.
ரதுகல நாயக்க தெனிகல மஹா பண்டாரலாகே சுதா வன்னியா மற்றும் நில்கல நாயக்க தெனிகல மஹா பண்டாரலாகே ஹேம்பால வன்னியா ஆகிய இரண்டு ஆதிவாசித் தலைவர்களும் சபாநாயகரை நேற்று நாடாளுமன்றில் சந்தித்துள்ளனர்.
காணிப் பிரச்சினை பாரியளவில் ஏற்பட்டுள்ளதாக வேடுவத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
காணிப் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தருமாறு ஆதிவாசித் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த மகஜர் தொடர்பில் துரித கதியில் கவனம் செலுத்தி தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரியää ஆதிவாசித் தலைவர்களிடம் உறுதிமொழி வழங்கியுள்ளார்.