பயணத்தை நிறுத்த முடியாது – மேர்வின்

257

கதிரை சூடாகியும், அந்த கதிரையில் மூட்டைப் பூச்சி இருப்பதாகவும் இருந்தால் மூட்டைப் பூச்சிகளை அழிக்காமல் வேறு கதிரையை தேடிக் கொள்வது தான் மிகவும் சிறந்தது எனவும் தான் இன்னும் அரசாங்கத்தில் என்ன நடைபெறுகின்றது என்பதை பொறுமையோடு பார்த்துக் கொண்டிருப்பதாகவும் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று கட்டுநாயக்க பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார்.

அரசியலில் இருந்த சிலர் தன் மீது கொண்ட பொறாமையின் காரணமாக எனக்கு வேட்பாளர் சந்தர்ப்பத்தை தரவில்லை. இருப்பினும் தான் நிலத்துக்குக் கீழால் நெருப்புக் கொண்டு செல்லும் ஒருவர் அல்ல.

கொத்தும் கோழிக்கு எந்தக் கூடும் ஒன்று என்பதனால், தான் எந்த நேரத்திலும் பயப்படாதுள்ளேன். எனது பயணத்தை யாராளும் நிறுத்தவும் முடியாது. பொறாமை, குரோதம் இன்றி செயற்படுவதாயின் பயணமொன்று இல்லை. நாட்டின் தலைவரானாலும் சமய பாடசாலைக்கு சென்று சமயக் கல்வியைப் பெறுவதுதான் பொருத்தமானது.

கட்சியாக இருக்கும் போது தொடர்ந்தும் தலையில் கைகழுவ வருவதாயின் பிரிந்து சென்று அதன் உறுப்பினர்களுக்கு ஒன்று சேர இடமொன்று இருக்க வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மேலும் கூறியுள்ளார்.

MERVIN

SHARE