சனல் 4 தொலைக்காட்சிக்கு வழங்கிய கருத்தை மறுக்கிறார் பிரதமர் ரணில்

280
போர்க்குற்ற விசாரணையில் அனைத்துலக தலையீடுகளை நிராகரிக்க முடியாது என்று சனல்-4 தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் தான் கூறவில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சர்வதேச போர்க்குற்ற விசாரணையை அரசாங்கம் அனுமதிக்காது. நாம் ரோம் உடன்பாட்டில் கையெழுத்திடவில்லை.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் வெளிநாட்டு நீதிபதிகள் தேவையில்லை என்றும், உள்நாட்டு நீதிபதிகளே விசாரணைகளை மேற்கொள்வர் என்றும் வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு கூறியிருந்தார்.

இந்த விடயத்தில் நானும், அதிபர் மைத்திரிபால சிறிசேனவும் அரசாங்கத்தில் உள்ள ஏனையவர்களும் ஒரே நிலைப்பாட்டிலேயே இருக்கிறோம். அதேவேளை விசாரணைகளுக்கு டெஸ்மன்ட் டி சில்வா போன்ற நிபுணர்களின் உதவி கோரப்படும்.

இதுபற்றி புதன்கிழமை நானும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் கலந்துரையாடியுள்ளோம் என்றும் அவர் நேற்று தெரிவித்தார். அத்துடன் ஊடகங்களையும் அவர் கடுமையாக சாடினார்.

BN-GM205_0116sr_M_20150116113630

BIRMINGHAM, ENGLAND - JULY 14:  Students at the University of Birmingham take part in their degree congregations as they graduate on July 14, 2009 in Birmingham, England. Over 5000 graduates will be donning their robes this week to collect their degrees from The University of Birmingham. A recent survey suggested that there are 48 graduates competing for every job.  (Photo by Christopher Furlong/Getty Images)

SHARE