ஏறாவூரில் உழவர் திருநாள் நிகழ்வு – கூட்டமைப்பு உறுப்பினர்கள் பங்கேற்பு

309
மட்டக்களப்பு ஏறாவூர் 5ம் குறிச்சி கிராம அபிவிருத்திச் சங்கமும், பொது மக்களும் இணைந்து நடாத்திய உழவர் திருநாள் நிகழ்வு ஸ்ரீ மதுமலர்க்கா வீரபத்திர சுவாமி ஆலய மணி அரங்கில் நேற்று நடைபெற்றது.

கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் ம.உமேஸ்கரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கோ.கருணாகரன், இரா.துரைரெட்ணம், செங்கலடி பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர், கிராம சேவை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், ஆலயங்களின் உறுப்பினர்கள், ஊர் பிரமுகர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது ஸ்ரீ மதுமலர்க்கா வீரபத்திர சுவாமி ஆலயத்தில் பூசை நிகழ்வுகள் இடம்பெற்றதும் உழவர் திருநாள் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டதுடன், அதிதிகளின் உரைகளும் இடம்பெற்றது.

அத்தோடு பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கோ.கருணாகரன், இரா.துரைரெட்ணம், செங்கலடி பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் மற்றும் ஏனைய அதிதிகள், உழவர்கள் ஆகியோருக்கு நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டதுடன், பல்கலைக் கழகத்திற்கு தெரிவான மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

SHARE