வத்தளையில் கடலுக்கு நீராட சென்ற இருவர் பலி

290
வத்தளை – பிரிதிபுர கடலில் நீராட சென்ற இருவர் நேற்று மாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தலவாக்கலை – லிந்துலை – பரகம் பிரதேசத்தை சேர்ந்தவர்களே பலியாகியுள்ளனர்.

குறித்த இருவரும், மேலும் சில நபர்களுடன் நீராட சென்ற போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் சடலங்கள், ராகம போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று பிரேத பரிசோதனைகள் இடம்பெறவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Drown-at-Sea-View

SHARE