அனைவருடனும் இணைந்து சேவையாற்ற தாம் தயாராக உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.
அக்குரஸ்ஸ ஹுலங்தாவ தமிழ் வித்தியாலயத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை இரண்டாக பிளவுப்படுத்தும் நோக்கில் ஒரு சில கும்பல்கள் ஈடுபடுவது தொடர்பிலும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
இதற்காக பலர் தீவிரவாத முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் சந்திரிக்கா மேலும் தெரிவித்துள்ளார்.
எனவே இவ்வாறான தீவிரவாத குழுக்களுக்கு தாம் அஞ்சப் போவதில்லை எனவும் நாட்டின் நன்மைக்காக அனைத்து தரப்போடும் இணைந்து செயற்பட தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.