ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து 20 பேர் விலகுகின்றனர்

262

 

இலங்கையில் மஹிந்த ராஜபக்ச தரப்பினரால் ஆரம்பிக்கப்படவுள்ள புதியக்கட்சியில் இணையும் முகமாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வந்துள்ளனர்.

இந்த இணக்கம் நேற்று இரவு ஸ்ரீஜெயவர்த்தபுரவில் அமைந்துள்ள முக்கியஸ்தர் ஒருவரின் வீட்டில் வைத்து ஏற்பட்டுள்ளதாக ஆங்கில இதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

தற்போது நாடாளுமன்றத்தில் கூட்டு எதிர்க்கட்சியாக செயற்படுவோரே இந்த இணக்கத்தை வெளியிட்டுள்ளனர்.

புதியக் கட்சிக்கு ஸ்ரீலங்கா என்ற பெயர் முன்னால் வருவதற்கு அமைய பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

எனினும் இன்னும் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை .

தமது புதிய கட்சி எதிர்வரும் தேர்தலில் தனித்துப்போட்டியிடும் என்று தெரிவித்துள்ள அந்த தரப்பின் முக்கியஸ்தர் ஒருவர் தேர்லை மாத்திரம் கருத்திற்கொள்ளாமல்ää இன்றைய அரசாங்கம் சர்வதேசத்துக்கு வழங்கியுள்ள இடத்தை தடுக்கவும் பாடுபடும் என்று குறிப்பிட்டுள்ளார்.

தமக்கு உள்ளுர் மட்டத்தில் 90 வீத ஆதரவு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை , ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் இரண்டு பிரிவுகளையும் இணைக்கும் அமைச்சர் எஸ் பி திஸாநாயக்கவின் முயற்சி குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,

மஹிந்தவின் புகழை பயன்படுத்தி, ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தை தோற்கடித்து பிரதமராகும் தமது கனவை நனவாக்கிக்கொள்ளவே எஸ் பி. திஸாநாயக்க எண்ணம் கொண்டிருப்பதாக ஏளனமாக தெரிவித்துள்ளார்.

SHARE