ஊடகங்களுக்கு அஞ்சியோடும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம்

266

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸ், ஊடகங்களைக் கண்டால் ஓடியொளிக்கும் பண்பைக் கொண்டிருப்பதாக ஊடகவியலாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணைகள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் தகவல்களை அறிந்து கொள்வதற்காக பணிப்பாளர் நாயகத்தை தொடர்பு கொள்வதற்கு ஊடகவியலாளர்கள் கடும் சிரமப்பட வேண்டியுள்ளது.

அவரது அலுவலகத்துக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொள்ளும்போது மேடம் மீட்டிங்கில் இருக்கின்றார், மேடம் வெளியில் சென்றுள்ளார், மேடம் டிஸ்கசனில் இருக்கின்றார் என்ற பதிலே தொடர்ச்சியாக வழங்கப்படுகின்றது.

ஒருபோதும் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸ் அழைப்புக்கு தொடர்புபடுத்தப்படுவதில்லை.

உண்மையிலேயே இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் வேலைப்பளுவுடன் இருப்பாராயின் அவர் சார்பில் ஊடகங்களுக்கு தகவல்களை வழங்க அதிகாரியொருவர் நியமிக்கப்பட வேண்டும் என்றும் ஊடகவியலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

SHARE