இனியும் வேண்டாம் இனவாதம்!பயனற்றவர்களினால் மக்களை ஏமாற்ற முடியாது!

284

அந்த லே இந்த லே என பயனற்றவர்களினால் மக்களை ஏமாற்ற முடியாது என வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

premadasha memorial 858

இம்பாந்தோட்டை மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்குபற்றி உரையாற்றிய போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவரது உரையில் மேலும் அவர் கூறுகையில்….

தேசப்பற்று என்பது அந்த லே இந்த லே என அங்கும் இங்கும் இனவாதத்தை தூண்டுவதல்ல.  பட்டினியில் வாடும் மக்களை சொந்தக் காலில் நிற்பதற்கு சக்தியை ஏற்படுத்திக் கொடுப்பதேயாகும்.

இந்த அனைத்துக்கும் அர்ப்பணிப்பு அவசியமானது.  மதி நுட்பமும் பணமும் தேவைப்படுகின்றது.  அது அங்கும் இங்கும் வெட்டிப் பேச்சு பேசித் திரிவதனைப் போன்று சுலபமானதல்ல.

சிலர் நினைக்கின்றார்கள் மக்களுக்கு புத்தியில்லை என்று. எனினும் மக்கள் இவ்வாறானவர்களின் தேசத்துரோக பயனற்ற செயற்பாடுகளை அனுமதிக்க மாட்டார்கள்.

புத்தி உள்ளவர்களையும் புத்தியற்றவர்களையும் அடையாளம் காணக்கூடிய சந்தர்ப்பம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

SHARE