பிரகீத் விசாரணையில் அம்பலமான மற்றொரு ஊடகவியலாளரின் கடத்தல்

288

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கும், பத்து ஆண்டுகளுக்கு முன்னர் மற்றொரு ஊடகவியலாளர் காணாமற்போன சம்பவத்துக்கும் தொடர்பிருப்பதாக தெரியவந்துள்ளது.

பிரகீத் கடத்தல் தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணைகளின் போதே, இந்தச் சம்பவம் தொடர்பான தகவல் குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2006ஆம் ஆண்டு, நுகேகொட பகுதியில் இருந்து குறிப்பிட்ட சுதந்திர ஊடகவியலாளர் காணாமற் போயிருந்தார். இது தொடர்பாக ஒரு ஆண்டுக்குப் பின்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.

பிரகீத் கடத்தலுடன் தொடர்புடைய சந்தேக நபர்களான, இராணுவப் புலனாய்வு அதிகாரிகளுக்கும், இந்தச் சம்பவத்துக்கும் இடையில் தொடர்பு இருப்பதாகவும் குற்றப்புலனாய்வுப் பிரிவின் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

mini

SHARE