மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த வாரம் முதல் கொழும்பு மருத்துவ பீட மாணவர்கள் சத்தியாகிரக போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
அத்துடன், நாடு தழுவிய ரீதியிலும் குறித்த தனியார் மருத்து கல்லூரிக்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கொழும்பு பல்கலைக்கழக் மாணவர்களின் சத்தியாகிரக ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அவர்களின் பெற்றோர்களும் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த பெற்றோர்கள் நாங்கள் மிகவும் கஷ்ட்டப்பட்டதாகவும் இந்த நிலை தமது பிள்ளைகளுக்கு ஏற்படக்கூடாது எனவும் கூறியுள்ளனர்.
முறையற்ற ரீதியில் அனுசரனை வழங்கப்பட்டுள்ள குறித்த தனியார் கல்லூரியின் காரணமாக தமது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே, குறித்த விடயம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி விரைவான நடவடிக்கையொன்றை மேற்கொள்ள வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.