அன்றைய காலகட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பிரதேசங்களே கட்டுமுறிவு மற்றும் ஆண்டங்குளம் கிராமங்கள்.
குறித்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் வாகரை நகரத்துக்குமான தொடர்பு சுமார் 19 கிலோ மீற்றரைத் தாண்டிய வனாந்தரம் நிரந்த காட்டு வனப்பகுதிகள் ஆகும்.
குறித்த ஆண்டாங்குளம், கட்டுமுறிவுக்குளம் பிரதான வீதி பல ஆண்டுகாலமாக கால்நடைகள் செல்வதற்கு ஏற்றால் போல நீண்டகாலமாக வீதிகள் புனரமைக்கப்படாமல் காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்தனர்.
தங்களையும் ஏனைய சமூகத்தைப்போல் நடாத்துமாறு அரசை கேட்டுக்கொள்வதுடன் குறித்த பிரதான வீதியை சீரமைத்துதருமாறு உருக்கமாக அதிகாரிகளை வேண்டுவதாகவும் தெரிவித்தனர்.
குறித்த பகுதி மக்கள் தேன் வெட்டுதல், விறகு எடுத்தல், மீன் பிடித்தல், கால்நடைகளை வளர்த்து அன்றாட ஜீவனோபய வாழ்ககையை நடாத்திக் கொண்டுவாழும் குறித்த கிராமத்து மக்களை எவரும் கண்டுகொள்வதில்லை என தெரிவித்தனர்.
காட்டு யானைகளின் தொல்லை, பாம்பு மற்றும் ஏனைய விச ஜந்துகள் தீண்டினால்கூட நிரந்தர வைத்தியசாலை இல்லை.
அப்படியிருந்தும் வாகரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதாக இருந்தால் பாதைகள ஆறும் குளமுமாக காணப்படுகின்றது எப்படி போக்குவரத்து செய்வது.
கடந்த வருடம் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் பாடசாலைக்கு வருகைதந்த அதிபரும் ஒரு ஆசிரியையும் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு தெய்வதீனமாக காப்பாற்றப்பட்டனர்.
எங்களின் உயிர்கள் போனால்தான் இந்த அதிகாரிகள் கவனத்தில் கொள்வார்கள், நாங்கள் எதையும் தற்போது கேட்கவில்லை, பிரதான பாதையை விரைவாக புனரமைத்து தருமாறுதான் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
குறித்த பிரதேசத்தில் அறுபத்தி நான்கு வயதுடைய மரகதம் அன்னம்மா என்ற பெண், குறித்த கிராம மக்கள் படும் அவல நிலையை லங்காசிறி 24 சேவைக்கு பின்வருமாறு தெரிவித்தார்.