தேசிய விளையாட்டு மற்றும் உடல் நலத்தைப் மேம்படுத்தும் தேசிய வாரம் இன்று அம்பாறை மாவட்டத்தில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

277

 

விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் கரீஸ் தலைமையில் இடம்பெறும் இந்த நிகழ்வுகள் கல்முனை அக்கியசதுக்க சந்தாங்கேணி மைதானத்தில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் கல்முனை பிராந்தியத்தில் உள்ள அரச திணைக்கள அதிகாரிகள், கல்முனை மாநகரசபை உறுப்பினர்கள், பற்றிமா கல்லூரி அதிபர் அருட்தந்தை விறையினர் செலர், கல்முனை சுமத்திராம விகாரையின் விகாராதிபதி ரன்முத்துகல சங்கரெத்தின தேரர், திணைக்கள ஊழியர்கள் பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இன்று காலை சாய்ந்தமருது பிரதான வீதியில் இருந்து பிரதி அமைச்சரின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட நடைபவனி சந்தாங்கேணி மைதானத்தினை வந்தடைந்தது.

பின்னர் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசியபாடசாலையில் இருந்து கல்முனை தமிழ்பிரிவு பிரதேச செயலாளரின் தலைமையில் சந்தாங்கேனி மைதானத்தினை நடைபவனி சென்றடைந்தது.

அத்துடன், உடற்பயிற்சிகள் நடைபெற்றதுடன், அரச திணைக்களங்கள் விளையாட்டு கழகங்களிடையே கிரிக்கட் மென்பந்து விளையாட்டுப்போட்டிகளும் மரதனோட்ட நிகழ்வுகளும் நடைபெற்றன.

இதேவேளை, ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட தேசிய விளையாட்டு உடல் நலத்தைப் மேம்படுத்தும் திட்டத்திற்கமைய இந்த நிகழ்வுகள் யாவும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE