மீள்குடியேற்றம் தொடர்பில் பிரதமர் கூறியதை நடைமுறைப்படுத்துங்கள்!ள்குடியே

301

 

வலி,வடக்கு மீள்குடியேற்றம் மற்றும், மீள்குடியேற்ற தேவைகள் தொடர்பாக அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் பேசி தீர்மானம் எடுக்கப்படவேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த விடயத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(மீள்குடியேற்றம்) எஸ்.முரளிதரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இன்றைய தினம் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா மற்றும் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் தலமையில் நடைபெற்ற மேற்படி கூட்டத்திலேயே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.

இன்று நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பேசிய அவர்,

இலங்கையில் ஆட்சிமாற்றம் உருவானதன் பின்னதாக வலி,வடக்கு மற்றும், வலி,கிழக்கு பிரதேசங்களில் 1759.50 ஏக்கர் நிலம் மீள்குடியேற்றத்திற்காக உயர்பாதுகாப்பு வலயத்திற்குள்ளிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலங்களில் மீள்குடியேற்றத்திற்காக இதுவரையில் 1952 குடும்பங்கள் மீள்குடியேற்றத்திற்கான பதிவுகளை மேற்கொண்டிருக்கின்றன.

இதேவேளை, யாழ்.மாவட்டத்தில் 11319 குடும்பங்களை சேர்ந்த 39096 பேர் மீள்குடியேற்றப்படவேண்டியுள்ளனர். என சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து சில பகுதிகள் மீள்குடியேற்றத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விடுவிக்கப்பட்டுள்ள சில பகுதிகளில் உள்ள முக்கியமான வீதிகள் சில, இன்னமும் விடுவிக்கப்படாத நிலையில் உள்ளதுடன், பலாலி ஆசிரியர் பயிற்சி கலாசாலை, மற்றும் முக்கியமான பாடசாலைகள் ஆகியன விடுவிக்கப்படவேண்டிய தேவையில் உள்ளதாக தெல்லிப்பழை பிரதேச செயலர் சிறீமோகனன் சபையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

வலி,வடக்கு மீள்குடியேற்றம் மற்றும், மீள்குடியேற்ற தேவைகள் தொடர்பாக அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் பேசி தீர்மானம் எடுக்கப்படவேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த விடயத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். எனவும் பிரதேச செயலர் இணைத் தலைவர்களிடம் கோரியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

SHARE