இலங்கை போக்குவரத்து சபையின் பருத்தித்துறை டிப்போ இன்று திங்கட்கிழமை இரண்டு புதிய பேருந்து சேவைகளை ஆரம்பித்துள்ளது.
பருத்தித்துறை – மூளாய் பொன்னாலை வரையான இலக்கம் 773 வழித்தடம் இன்று அதிகாலை 5.30 மணிக்கும், பருத்தித்துறை – சாவகச்சேரி வரையான 765 வழித்தடப் பேருந்து சேவை இன்று அதிகாலை 5.45 மணிக்கும் ஆரம்பமாகியுள்ளது.
குறித்த 765 வழித்தடப் பேருந்து மறுபடியும் சென்ற பாதைவழியே பிற்பகல் 2.45 மணிக்கு பருத்தித்துறையை வந்து சேரும்.
இதேவேளை 773 வழித்தடப் பேருந்து மூளாயில் இருந்து காலை 8.00 மணிக்கும் பிற்பகல் 2.45 மணிக்கும் மேலும் இருசேவைகள் ஆரம்பமாகவுள்ளதாகவும் அறியமுடிகின்றது.
பொது மக்களின் நலன் கருதி இந்த 773 வழத்தட பேருந்து சேவைகள் பருத்தித்துறையில் இருந்து மந்திகை-நெல்லியடி- குஞ்சர்கடை-உடுப்பிட்டி- தொண்டைமானாறு-அச்சுவேலி-புத்துர்-சுன்னாகம் மல்லாகம்-மாவிட்டபுரம்-கீரிமலை –சேந்தாங்குளம்- விளான்- பண்டத்தரிப்பு சித்தங்கேணி-சுழிபுரம்- மூளாய் வரை செல்லும் என பருத்தித்துறை சாலை முகாமையாளர் க.கந்தசாமி தெரிவித்தார்.