சில மேஜர் ஜெனரல்களிடம் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு விசாரணை நடத்த உள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஊழல் மோசடிகள், கையூட்டல் பெற்றுக்கொண்டமை, பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள், பாலியல் லஞ்சம் பெற்றுக்கொண்டமை, முறைகேடுகளில் ஈடுபட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட இராணுவ மேஜர் ஜெனரல்கள் உள்ளிட்ட சில அதிகாரிகள் இவ்வாறு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக பொலிஸ் தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இராணுவத்தில் இடம்பெற்ற பல்வேறு ஊழல் மோசடிகள், முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே மேஜர் ஜெனரல் ஒருவர், லெப்டினன் கேணல் ஒருவர் உள்ளிட்ட அதிகாரிகள் சிலர் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
தற்போது சேவையாற்றி வரும் முகாம்களில் மேற்கொள்ளப்பட்ட முறைகேடுகள் தொடர்பில் விசாரணை நடத்தவே இவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
விசாரணைகளுக்கு பல்வேறு தரப்பினர் இடையூறு ஏற்படுத்தி வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.