ரஜினியின் வாழ்க்கையை படமாக எடுக்க தயார் – மணிரத்னம்

260

ரஜினியின் வாழ்க்கையை படமாக எடுக்க தயார், ஆனால்? மணிரத்னம் ஓபன் டாக் - Cineulagam

தமிழ் சினிமாவின் பெருமையை இந்திய அளவில் கொண்டு சென்றவர்களில் மணிரத்னமும் ஒருவர். இவர் அடுத்து கார்த்தி நடிக்கும் ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

சமீபத்தில் இவர் பெங்களூரில் ஒரு திரைப்பட விழாவை தொடங்கி வைக்க சென்றுள்ளார். அங்கு அவரிடம் ரஜினிகாந்தின் வாழ்க்கையை நீங்கள் படமாக இயக்குவீர்களா என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது.

அதற்கு அவர் ‘கண்டிப்பாக ரஜினியின் வாழ்க்கையை படமாக் எடுக்க தயார், ஆனால், இன்று வரை அந்த கதாபாத்திரத்திற்கான நடிகர் தான் கிடைக்கவில்லை’ என சாமர்த்தியமாக கூறினார்.

SHARE