சட்டவிரோதமான முறையில் ஆடுகளை கடத்திச் சென்ற 3 பேரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.யாழ்ப்பாணம் ஜந்து சந்திப் பகுதியில் வைத்தே இவர்கள் வாகனத்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 12 மறியாடுகளும், 6 கிடாய் ஆடுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இச் சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டவர்களிடம் மீட்கப்பட்ட ஆடுகள் அவர்களுடையதுதான் என்பதை உறுதிப்படுத்தும் எந்த ஆவணங்களும் அவர்களிடம் இல்லை. பணத்திற்காக ஆடுகளை பெற்றுக் கொண்டமைக்காக ஆதாரங்களும் அவர்களிடம் இல்லை.
எனவே குறித்த ஆடுகள் திருடப்பட்டவையாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் ஆடுகளை தொலைத்தவர்கள் யாரேனும் இருந்தால் யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு வந்து உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.