2014 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் 358 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், ஆண்டொன்றில் இலங்கைக்கு 763 கிலோகிராமிற்கும் அதிகமான ஹெரோயின் தேவைப்படுவதாக கணிப்பிடப்பட்டுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்பிரகாரம், ஹெரோயின் விநியோகம் தொடர்பில் 2014 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் 49,823 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
அத்துடன், 2014ஆம் ஆண்டு 1964 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 2015ஆம் ஆண்டு 6569 கிலோகிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கஞ்சா விநியோகம் தொடர்பில் 2014ஆம் ஆண்டு 43,683 சந்தேகநபர்களும், 2015ஆம்ஆண்டு 50,000 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.