மஹிந்த ராஜபக்ச குடும்பத்திற்கு ஏற்பட்டுள்ள நிலைமை கிராமத்தில் பிறந்தவன் என்ற வகையில் தான் கவலையடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்டவிரோதமாக அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படுமாயின் அதற்கு எதிராக குரல் கொடுக்க தான் தயார் எனவும் சிங்கள தனியார் வானொலி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
எனினும் நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிராக கருத்துக்களை வெளியிட முடியாது எனவும் அவர் சுட்டிக்ககாட்டியுள்ளார்.
யோஷத ராஜபக்ச கைது செய்யப்பட்டதன் பின்னர் தான் தனது கவலையை முன்னாள் ஜனாதிபதியிடம் தெரிவிக்கவில்லை எனவும், தற்போதைய சூழ்நிலையில் அது அவருக்கு மேலும் மனவேதனையை அளிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோஷிதவை தான் இதுவரை சென்று பார்க்கவில்லை பார்க்கவில்லை எனவும், நிஷாந்த ரணதுங்க, ரொஹான் வெலிவிட ஆகியோர் தனது நண்பர்கள் எனவும், அவர்களை வெகுவிரைவில் சென்று பார்வையிடவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.