தமிழரசுக்கட்சியின் இன்றைய தலைவரும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அவர்கள் தான் சுதந்திரதின் வைபவத்தில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று தினப்புயல் இணையத்தளத்திற்குத் தெரிவித்துள்ளார். சுதந்திரதின வைபவத்திற்கு தங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதா? எனக் கேள்வி எழுப்பப்பட்டபோது அழைப்புக்கொடுக்கப்பட்டது ஆனால் நான் அதில் பங்குபெறப்போதில்லை எனவும் எமது பகுதியில் இந்த நாளில் கூட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றது. அதில் நான் பங்கு கொள்ளவேண்டும். எமது அங்கத்தவர்களைச்சேர்ந்த யார் பங்கு பற்றினாலும் நான் பங்குபெற்றப் போவதில்லையென்று அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.