கைதுசெய்யப்பட்டுள்ள நபர் காங்கேசன்துறை பொலிஸ் பயிற்சி நிலையத்தில் பயிற்சிப் பெற்ற பிரதம பொலிஸ் பரிசோதகரான கந்தையா ஜீவன் குமார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் அம்பாறை பிரதேசத்தைச் சேர்ந்த தாஜுதீன் ரபாய்தீன் என்ற நபர் மட்டக்களப்பு சம்பத் வங்கிக்கு தனது சொந்த அலுவல் நிமித்தம் சென்றிருந்த வேளை அங்கு வைத்து தனது பணம் காணாமல் போயுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் வங்கிக்குள் உள்ள சீ.சீ.ரீ.வி கெமரா பதிவுகளை பரிசோதித்த வேளை இந்த சந்தேக நபரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சந்தேக நபரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதைத் தொடர்ந்து இவரை எதிர்வரும் 5ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் கணேசராஜா உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.