அஜித் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் வேதாளம். இப்படம் பல படங்களின் வசூல் சாதனையை முறியடித்தது.
இந்நிலையில் இப்படம் ஏற்கனவே ஆந்திராவில் ஜுனியர் என்.டி.ஆர்நடிப்பில் வெளிவந்த ஊசரவல்லி படத்தின் காப்பி தானாம். அதில் தமன்னாவை காதலிக்கும் என்.டி.ஆர், திடிரென்று சில கொலைகளை செய்கிறார்.
இதை நேரில் பார்க்கும் இரண்டாவது ஹீரோயின் பாயலிடம் தன் ப்ளாஷ்பேக்கை சொல்கிறார். காவல்துறையில் வேலை செய்து வந்ததமன்னாவின் அண்ணன் மற்றும் குடும்பத்தாரை சிலர் கொன்று விடுகிறார்கள். அதிலிருந்து தமன்னா மட்டுமே தப்பிக்கிறார். அவர் தலையில் குண்டு பாய்ந்ததால் அவர் பழைய நினைவுகளை சீக்கிரமே மறந்துவிடுவார் என்கிறார்கள். அதனால், தன் குடும்பத்தாரைக் கொன்றவர்களை ஜுனியர் என்.டி.ஆரை வைத்து பழி வாங்குகிறார்.
வேதாளத்தில் தங்கை, இதில் காதலி அவ்வளவு தான் வித்தியாசம், இந்த படத்தை தற்போது பவன் கல்யான் ரீமேக் செய்வது பலருக்கும் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.