இணையத்தளம் ஒன்றை இலங்கையில் தடை செய்யக் கோருகிறது மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம்

286
தமக்கு எதிரான கருத்துக்களை பரப்பிவரும் ஆங்கில இணையத்தளம் ஒன்றை தடைசெய்யுமாறு இலங்கை மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் சம்மேளனம், ஏற்கனவே பொலிஸ் மா அதிபரிடமும் இணைய குற்றப்பிரிவிடமும் முறைப்பாடுகளை செய்துள்ளதாக சம்மேளனத்தின் தலைவர் வைத்திய கலாநிதி அநுருத்த பாதெனிய தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சட்டவிரோத சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் தனிப்பட்ட வைத்தியர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் தமது சம்மேளனம் கருத்துக்களை கூறவில்லை என்று குற்றம் சுமத்தியே குறித்த இணையத்தளம் விமர்சனங்களை வெளியிட்டு வருகிறது.

எனினும் அந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் ஊடக தத்துவ உரிமையை குறித்த இணையத்தளம் வழங்க மறுப்பதாகவும் பாதெனிய குற்றம் சுமத்தியுள்ளார்.

எனவே இந்த இணையத்தளம் இலங்கையில் தடைசெய்யப்பட வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

இந்த விடயத்தை ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உடல் உறுப்பு மாற்று சிகிச்சை ஒழுங்குவிதிகள் பலப்படுத்தப்பட வேண்டும்: மருத்துவ சம்மேளனம்

இலங்கையின் உடல்உறுப்பு மாற்று சிகிச்சை தொடர்பான ஒழுங்குகளை பலப்படுத்தவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை மருத்துவ சம்மேளனம் இந்தக்கோரிக்கையை முன்வைத்துள்ளது.

இதில், இறந்தவர்களின் உடல்உறுப்புக்களை மாற்றும் தேசிய உடல்உறுப்பு திட்டமும் உள்ளடக்கப்படவேண்டும் என்று சம்மேளனம் கேட்டுள்ளது.

இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள சம்மேளனம்,

வைத்தியசாலைகளின் உடல்உறுப்பு மாற்றம் தொடர்பான ஒழுங்கமைப்பு குழுக்களுக்கான ஒழுங்குவிதிகளும் பலப்படுத்தப்படவேண்டும்.

இதன்மூலமே இலங்கையில் சட்டவிரோத உடல்உறுப்பு மாற்றுக்களை கட்டுப்படுத்தமுடியும் என்றும் சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் சட்டவிரோத சிறுநீரக மாற்று சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் அந்த விசாரணையின் முடிவில் உண்மை வெளியாகும் என்றும் சம்மேளனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

அதேநேரம் இலங்கையில் மேற்கொள்ளப்படும் உடல் உறுப்பு மாற்று சிகிச்சைகள், சுகாதார அமைச்சின் அனுமதியுடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் சம்மேளனம் கோரியுள்ளது.

Internet1

SHARE