இலங்கை – பாகிஸ்தான் – மாலைத்தீவு கூட்டு இராணுவப்பயிற்சி

427
இலங்கை, பாகிஸ்தான் மற்றும் மாலைத்தீவு படையினர் இணைந்து பயங்கரவாத எதிர்ப்பு இராணுவ பயிற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் இந்த பயிற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாகிஸ்தானிய இராணுவம் அறிவித்துள்ளது.

இந்த பயிற்சி இரண்டு வாரங்களுக்கு  தொடந்த நிலையில் பயங்கரவாதத்துக்கு எதிரான தாக்குதல் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டதாக அந்த நாட்டின் இராணுவம் அறிவித்துள்ளது.

இவ்வாறான பயிற்சிகள் ஏற்கனவே சவூதி, பஹ்ரெய்ன், சீனா ஆகிய நாடுகளுடனும் மேற்கொள்ளப்பட்டன.

ஈகல் டேஷ் 1 என்ற பெயரிடப்பட்ட இந்த பயிற்சிகளை பாகிஸ்தானிய இராணுவ தளபதி ரஹீல் செரீப் நேரடியாக பார்வையிட்டுள்ளார். எனினும் இந்த பயிற்சிகள் எப்போது மேற்கொள்ளப்பட்டன என்ற விபரம் அறிவிக்கப்படவில்லை.

SHARE