தவறான சட்டங்கள் காரணமாகவே தமிழீழ கோரிக்கைக்கு ஆயுதம் ஏந்தினர்: சிறிநேசன்

400
தவறான சட்டங்கள் காரணமாகவே தமிழீழ கோரிக்கைக்கு ஆயுதம் ஏந்தினர் என மட்டக்களப்பு தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

இலங்கையின் 68ஆவது சுதந்திர தினம் நேற்றைய தினம் நாட்டில் பல பகுதியிலும் நடைபெற்றுக்கொண்டிருந்தது.அதேவேளை மட்டக்களப்பு காந்தி பூங்கா சதுக்கத்தில் கடத்திச் செல்லப்பட்டு காணமல் ஆக்கப்பட்டவர்களின் தமிழ் உறவுகள் கண்ணீர் மல்க வீதியின் நடுவில் நின்று போராட்டமொன்றை நடத்தினர்.

இவர்கள் கண்ணீர்விட்டு தங்களின் உறவுகளை மீட்டுத்தாருங்கள் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.

இந்த போராட்டத்திற்கு வருகைதந்த பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் லங்காசிறி 24 செய்திச் சேவைக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

SHARE