ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘மிருதன்’. ‘ஜோம்பி’ பாணியில் உருவாகியுள்ள இப்படத்தில் ஹீரோயினாக லட்சுமி மேனன் நடித்துள்ளார். சக்தி சௌந்தரராஜன் இயக்கியுள்ளார். இப்படம் வருகிற பிப்ரவரி 12-ந் திகதி வெளியிடப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், இப்படத்திற்கு தணிக்கை குழுவினர் ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதால் தணிக்கை குழுவினர் ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளதாக கூறியுள்ளனர்.
இது படக்குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியை தரவே, படத்திற்கு எப்படியாவது ‘யுஏ’ சான்றிதழ் வாங்கிவிட வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கியுள்ளனர். அதன்படி, படத்தில் ஒரு சில காட்சிகளை நீக்கிவிட்டு, படத்தை மறுபடியும் தணிக்கை குழுவினரின் மறுபார்வைக்கு அனுப்ப உள்ளனர்.
அதன்பிறகு, தணிக்கை குழுவினர் எடுக்கும் முடிவை பொறுத்து படத்தின் ரீலீஸ் தேதியை அறிவிக்கலாம் என படக்குழுவினர் தற்போதைக்கு ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அனேகமாக, ‘மிருதன்’ ரிலீஸ் தேதி பிப்ரவரி 19-ந் திகதிக்கு வெளியாகலாம் என படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரங்களில் பேசப்படுகிறது.