
இன்றைய காலகட்டத்தில் படத்தின் ஒரு படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலை விட இணைய தளத்தில் டீசர், டிரைலரின் ஹிட்ஸ் தான் ரசிகர்கள் வெற்றியாக கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘தெறி’ டீசர் பல சாதனைகளை படைத்துள்ளது.
டீசர் வெளியான முதல் 5 நிமிடத்தில் 25 ஆயிரம் லைக்ஸ் பெற்றது. தொடர்ந்து 15 நிமிடத்தில் 50 ஆயிரம் லைக்ஸ். 74 நிமிடத்தில் 75 ஆயிரம் லைக்ஸ். 6 1/2 மணி நேரத்தில் 1 லட்சம் லைக்ஸ். 50 மணி நேரத்தில் 2 லட்சம் லைக்ஸ்களை பெற்று இதுவரை அனைத்து டீசர்களின் சாதனைகளை முறியடித்துள்ளது. அதுபோல், 29 மணி நேரத்தில் 30 லட்சம் பார்வையாளர்களை பெற்றும் சாதனை படைத்திருக்கிறது. தற்போது 43 லட்சத்தையும் தாண்டி பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமிஜாக்சன் நடித்துள்ளார்கள். அட்லி இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். கலைப்புலி தாணு தயாரித்துள்ளார்.