வடக்கு முதல்வரின் கோரிக்கையை நிராகரித்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர்

355
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் கோரிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நிராகரித்ததாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்துக்கு ஆணையாளர் நேற்று விஜயம் செய்த போது, வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை சந்தித்தார்.

இதன்போது சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கும் விடயத்தில் ஆணையாளர் தலையிட வேண்டும் என்று விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

எனினும் இதனை ஏற்றுக்கொள்ளாத ஆணையாளர் செய்ட் அல் ஹூசைன்,  அரசாங்கத்தின் நீதி முறைகளின் அடிப்படையிலேயே அது இடம்பெற முடியும் என்று தெரிவித்துள்ளார்.

SHARE