முதல் படம் வெற்றிபெற்றுவிட்டால் அதன் இரண்டாம் பாகம் வருவது இப்போதெல்லாம் தமிழ் சினிமாவில் சகஜமாகிவிட்டது.
அந்த வகையில் இதுவரை இரண்டாம் பாகம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பது போல பல வித்தியாசமான படங்களை இயக்கிவந்த பிரபுசாலமன் கும்கி இரண்டாம் பாகம் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.
கும்கி இரண்டாம் பாகத்தில் முன்னணி நடிகர், நடிகைகள் நடிப்பார்கள் என கூறப்படுகிறது.
தற்போதைக்கு பிரபு சாலமன், தனுஷை வைத்து இயக்கி வரும் படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் பிசியாக இருக்கிறார். இப்படம் வெளிவந்த பிறகு கும்கி இரண்டாம் பாகத்தின் பணிகளை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.