யோசிதவை பார்வையிட்ட கலைஞர்கள்

237
சி.எஸ்.என். தொலைக்காட்சி விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட யோசித ராஜபக்ஸவை பார்வையிட கலைஞர்கள் வெலிக்கடை சிறைச்சலைக்கு இன்று சென்றுள்ளனர்.

இதன்போது யோசித உட்பட ஏனையோர் கைது செய்யப்பட்டமை அரசியல் பழிவாங்கல் என தெரிவித்துள்ளனர்.

அத்துடன் ஒரு கலைஞரான ரொஹான் வெலிவிடவின் கைதானது, கலைஞர்களை அவமதிப்பது போன்று உள்ளது என  தாம் கருதுவதாக அவர்கள் கூறியுள்ளனர்.

சி.எஸ்.என் தொலைக்காட்சி ஊழியர்களை பழிவாங்கும் நோக்கில் இந்த அரசாங்கம் செயற்படுவது தவறு. இவ்வாறான அரசியல் பழிவாங்கல்களை இந்த அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும்.

கலைஞர்களுக்கான சுதந்திரம் முழுமையாக வழங்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் இதன்போது வலியுறுத்தியுள்ளனர்.

SHARE