விஜய் மில்டன் இயக்கத்தில் தேவயானி கணவர் ராஜகுமாரன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் பரத் வில்லனாக நடிப்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் ஏற்கனவே இவருடைய இயக்கத்தில் சமந்தா 10 எண்றதுக்குள்ள படத்தில் நடித்திருந்தார், அதில் ஏற்பட்ட நட்பிற்காக இப்படத்தில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் என்பதால் ராஜகுமாரனுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கின்றார் என கூறப்பட்டது.
ஆனால், இவை அனைத்து வெறும் வதந்தி தான், இதுக்குறித்து நான் சமந்தாவிடம் பேசியதே இல்லை என விஜய் மில்டன் கூறியுள்ளார்.