தமிழ் சினிமா ரசிகர்களின் தீராத பிரச்சனை நம்பர் 1 விஜய்யா?அஜித்தா? என்பது தான். இதை மாறி மாறி இவர்களே தங்கள் படங்களின் மூலம் பல சாதனைகளை முறியடித்து வருகின்றனர்.
இந்நிலையில் அஜித் பில்லா, பில்லா2 என இரண்டு பாகங்களாக ஒரு படத்தில் நடித்து முடித்து விட்டார். இந்நிலையில் மீண்டும் என்னை அறிந்தால்-2விற்கும் ரெடியாகவுள்ளார்.
இதேபோல் தெறி படம் ரிலிஸே ஆகவில்லை, ஆனால், பார்ட் 2விற்கு அட்லீ-விஜய் ரெடியாகி வருவதை நாம் முன்பே கூறியிருந்தோம்.
இதேபோல் சூர்யா சிங்கம்-3 வரை லீடிங்கில் இருக்கிறார், கமல்ஹாசனும் விஸ்வரூபம்-2விற்காக வெயிட்டிங், இது மட்டுமின்றி மாரி-2, தனி ஒருவன்-2 என பல படங்கள் அடுத்த பாகத்திற்கு ரெடியாகி வருகின்றது.