நீதியமைச்சில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின்போதே இவ்வாறு தெரிவித்தார். நீதியமைச்சர் மேலும் தெரிவிக்கையில், “நீதியமைச்சு, கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடம், பேராதனை, யாழ்ப்பாணம்
மற்றும் திறந்த பல்கலைக்கழகங்களின் சட்ட பீடங்கள் ஆகியவற்றின் ஒருங்கிணைப்புடன் தற்போதுள்ள சட்டங்களைப் பற்றி ஆராயும் புதிய பிரிவொன்று ஆரம்பிக்கப்படும்.
தற்போது அமுலில் உள்ள சட்டங்களில் நிலவும் குறைபாடுகளைக் களைந்து புதிய சட்டமூலங்களை உருவாக்குவதற்காக இம்முறை வரவு – செலவுத்திட்டத்தில் 75 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
இந்தக் கலந்துரையாடலில் நீதியமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன, கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் வீ.டீ.தமிழ்மாறன், அப்பீடத்தின் பிரிவுத் தலைவர் இந்திரா நாணயக்கார பல்கலைக்கழகங்களின் சட்ட விரிவுரையாளர்கள், நீதியமைச்சின் உயரதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.