ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் மஹிந்த இன்றும் ஆஜர் February 19, 2016 287 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பாரிய ஊழல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்றும் ஆஜராகவுள்ளார். ஜனாதிபதி தேர்தலின் போது சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய பல மில்லியன் ரூபாய்கள் நிலுவை தொடர்பிலேயே இந்த விசாரணை நடத்தப்படுகிறது. மஹிந்த ராஜபக்ச இந்த விசாரணைக்குழுவினால் நேற்றும் விசாரணை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.