உடகம பிரதேசத்தில் இருந்து எம்பிலிப்பிட்டிய நோக்கி சென்று கொண்டிருந்த முச்ககர வண்டிக்கு பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் முச்சக்கர வண்டியின் பின் பகுதியில் மோதியுள்ளதுடன் அதனை ஓட்டிச் சென்ற நபர் வீதிக்கு வலது புறம் தூக்கி எறிப்பட்டுள்ளார்.
அப்போது எம்பிலிப்பிட்டிய திசையில் இருந்து வந்த இராணுவ லொறி ஒன்று அவர் மீது மோதியுள்ளது.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இராணுவத்தில் சேவையாற்றி வந்த செவனகல பிரதேசத்தை சேர்ந்த 30 வயதான தினுஷ அசங்க சில்வா என்ற நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் இராணுவ லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. எம்பிலிப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.