பொதுமக்களை பகைத்துக் கொண்டு எட்கா கைச்சாத்திட முடியாது! விஜித ஹேரத் எச்சரிக்கை

306

பொதுமக்களை பகைத்துக் கொண்டு அரசாங்கம் தன்னிச்சையாக எட்கா ஒப்பந்தத்தில் கைச்சாத்திட முடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் எச்சரித்துள்ளார்.

எட்கா ஒப்பந்தம் மற்றும் அது தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடுகள் குறித்து சிங்கள ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள விஜித ஹேரத், பொதுமக்கள் மற்றும் தொழில்சார் நிபுணர்கள் என யார் எதிர்த்தாலும் அதனைப் பொருட்படுத்தாது எட்கா ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப் போவதாக பிரதமர் அறிவித்துள்ளார்.

ஆனால் நாட்டுமக்களின் எதிர்ப்பை மீறி அராசங்கம் எந்தவொரு தீர்மானத்தையும் தனித்து எடுக்க முடியாது. அவ்வாறு சர்வாதிகாரத்தனமாக நடந்து கொண்டால் அரசாங்கம் சீக்கிரமே வீட்டுக்குப் போக நேரிடும்.

எட்கா ஒப்பந்தம் மூலம் இலங்கையர்களுக்குத் தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என்று பிரதமர் கூறினாலும் உண்மை என்னவென்றால் முடிதிருத்துனர் முதல் மருத்துவர், பொறியியலாளர் வரையான அனைத்து தொழில்வாய்ப்புகளும் இலங்கையரிடமிருந்து பறிபோய்விடும்.

இந்தியா எமது நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாக கபளீகரம் செய்துவிடும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

images

SHARE