ஜெயம் ரவி நடிப்பில் மிருதன், விஜய் சேதுபதி நடிப்பில் சேதுபதி ஆகிய இரண்டு படங்கள் கடந்த வாரம் திரைக்கு வந்தது. இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
தற்போது இப்படங்களின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் வெளிவந்துள்ளது. இதில் சேதுபதி 3 நாட்களில் ரூ 74 லட்சம் வசூல் செய்து 2ம் இடத்தில் உள்ளது.
எல்லோரும் எதிர்ப்பார்த்தது போல் முதல் இடத்தில் மிருதன். இப்படம்ரூ 1.17 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் தொடர்ந்து 4 வாரமாக சென்னை பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பும் இறுதிச்சுற்று ரூ 3.13 கோடி வசூல் செய்துள்ளது.