யாழ். பருத்தித்துறை – பொலிகண்டி பகுதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 61 கிலோ கேரள கஞ்சா பருத்தித்துறை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பருத்தித்துறை- பொலிகண்டி பகுதியில் விற்பனைக்காக பெருமளவு கஞ்சா வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றையடுத்து பொலிஸார் நடத்திய சோதனை நடவடிக்கையில் மேற்படி கஞ்சா இன்றைய தினம் அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் பொலிகண்டி பகுதியை சேர்ந்த 27வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.