சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கியிருந்த இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த இலங்கையர்கள் உள்ளிட்ட 971 பேரை கைது செய்துள்ளதாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை முதல் நாடு முழுவதிலும் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின் மூலம் இவ்வாறு 971 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை, நேபாளம், இந்தியா, பங்களாதேஸ், பர்மா, இந்தோனேசியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மலேசியாவில் அதிகளவான வெளிநாட்டுப் பிரஜைகள் தொழில்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.