பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய அளவில், இரண்டு வான்வெளி பொருட்களுக்கு இடையே நிகழும் மோதலை ‘இம்பாக்ட் ஈவன்ட்’ (Impact Event), அதாவது மோதல் நிகழ்வு என்கிறார்கள்.
ஆயிரகணக்கான குறுங்கோள்கள், வால்மீன்கள் அல்லது ‘விண்வீழ்’ கொண்ட விண்வெளி கிரக அமைப்பில் மிகவும் வழக்கமாக நடக்கும் சம்பவம் தான் இந்த மோதல் நிகழ்வுகள் என்றாலும்கூட, நாம் வாழும் பூமி கிரகத்தோடு விண்வெளி பொருள் ஒன்று மோதுகிறது அல்லது மோதும் வாய்ப்பு உள்ளது என்றால் அதை எளிமையாக எடுத்துக்கொள்ள கூடாது. அதை கருத்தில் கொண்டு தான் பூமியின் சுற்றுவட்ட பாதைக்குள் நுழையும் அல்லது நுழையும் வாய்ப்பு கொண்ட விண்வெளி பொருட்களை துல்லியமாக கண்காணித்துக்கொண்டே இருக்கிறது விண்வெளி ஆரய்ச்சி நிலையங்கள். அபப்டியானதொரு கண்காணிப்பில் சிக்கியது தான் – 2013 டிஎக்ஸ்68 (2013 TX68) என்ற குறுங்கோள்..!
21 மடங்கு குறைவான தூரம்:
கணிக்க முடியாதபடி இருக்கும் இந்த குறுங்கோள் ஆனது பூமியை மிகவும் நெருங்கி கடக்க இருக்கிறது அதாவது வெறும் 17,000 கிலோமீட்டர் (11,000 மைல்கள்) தூரத்தில் கடக்க இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.
21 மடங்கு நெருக்கமான தூரம்:
இந்த தூரமானது பூமிக்கும் நிலவிற்கும் இடைப்பட்ட தூரத்தை விட 21 மடங்கு நெருக்கமான தூரம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
9 மில்லியன் மைல்கள்:
இருப்பினும் இந்த குறுங்கோள் ஆனது சுமார் 9 மில்லியன் மைல்கள் (14 மில்லியன் கிலோமீட்டர்கள்) தொலைவிலும் பூமியை கடக்கலாம் என்றும் நாசாவினால் கணிக்கப்படுகிறது.
பூமியில் இருந்து:
இந்த 2013 டிஎக்ஸ்68 குறுங்கோள் ஆனது 2 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது என்பதும், கண்டுபிடிக்கப்படும் போது பூமியில் இருந்து சுமார் 3 மில்லியன் மைல்கல் (5 மில்லியன் கிலோமீட்டர்கள்) தொலைவில் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மார்ச் 5 முதல் 8:
தற்போது கூடுதல் கண்காணிப்பின் மூலம் 2013 டிஎக்ஸ்68 குறுங்கோளின் அதன் கோளப்பாதை புரிந்து கொள்ளப்பட்டு, அது வரும் மார்ச் 5 முதல் 8 ஆகிய இடைப்பட்ட தேதிகளில் பூமியை கண்டது செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அச்சுறுத்தல் இல்லை:
நாசாவின் புவி பொருள் ஆய்வு மையம் (Nasa’s Center for Near-Earth Object Studies – CNEOS) பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கும் இந்த குறுங்கோள் மூலம் உலகிற்கு எந்த விதமான அச்சுறுத்தலும் இல்லை என்று தெரிவித்துள்ளது.