நிகழ்வு ஒன்றுக்காக புதுடில்லிக்கு சென்றுள்ள அவர், தமது ஆரம்ப உரையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தொடர்கையில், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான முறுகலை, தென்னாசிய நாடுகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பே தடுத்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய பொருளாதார வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது தென்னாசிய பொருளாhதார ஒருங்கிணைப்பு மிகவும் தாமதத்துடன் நகர்கிறது.
இந்தநிலையில் தென்னாசிய நாடுகளுக்கு இடையில் புரிந்துணர்வும் ஒத்துழைப்பும் பலப்படுத்தப்படவேண்டும் என்று அவர் கோரிக்கை விடு;த்துள்ளார்.
பிராந்திய சுற்றாடல் மற்றும் தேசிய பாதுகாப்பு என்ற விடயங்களில் ஒவ்வொரு நாடும் ஏனைய நாடுகளுக்கு உதவியளிக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இலங்கையை பொறுத்தவரையில் அது அனைத்து தென்னாசிய நாடுகளுக்கும் பாலமாக அமைகிறது. அது அனைத்து நாடுகளுடனும் சிறந்த உறவைப்பேணி வருகிறது என்றும் சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.