எக்டா உடன்படிக்கை தொடர்பில் ஆராயும் இந்திய குழு நாளை இலங்கை விஜயம்

410

இலங்கை இந்திய பொருளாதார வர்த்தக தொழில்நுட்ப உடன்படிக்கை தொடர்பிலான கலந்துரையாடல்களை நடாத்தும் வகையில் இந்திய உயர்மட்ட குழுவொன்று நாளை இலங்கைக்கு வருகைத் தரவுள்ளது.

இதன்படி, இலங்கை மற்றும் இந்திய அதிகாரிகளுக்கு இடையிலான விசேட செயலமர்வு ஒன்று எதிர்வரும் வெள்ளிக்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளது.

இலங்கை – இந்திய கூட்டு ஆணைக்குழுவின் ஊடாக கலந்தாலோசிக்கப்பட்டு இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்பிரகாரமே அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது.

நாளைய தினம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்திய உயர்மட்ட குழு இலங்கையிலுள்ள முன்னணி வர்த்தக மற்றும் தொழில்நுட்ப துறைகளைச் சார்ந்தவர்களுடன் கலந்துரையாடல்களை நடாத்தவும் எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

SHARE