சம்பூர் அனல்மின் நிலையப் பணிகளை இடைநிறுத்தக் கோரி உண்ணாவிரதப் போராட்டம்

308

சம்பூர் அனல்மின் நிலையப் பணிகளை இடைநிறுத்தக் கோரி இன்று காலையிலிருந்து அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்படுகிறது.

இந்த ஆர்ப்பாட்டமானது திருகோணமலை கட்டைப்பறிச்சான் சாலையூரில் நடைபெற்று வருவதாக தெரியப்படுகின்றது.

அனல்மின் நிலையத்தினால் தாம் பெரிதும் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டிய பொதுமக்கள், அந்த இடத்தில் அனல் மின் நிலையத்தினை அமைக்க வேண்டாம் என்ற கோரிக்கையை அரசிடம் முன்வைக்கின்றனர்.

இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர், கிழக்கு மாகாண கல்வி மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர், ஆகியோர் ஸ்தலத்திற்கு வருகைத்தந்து மக்களது குறைகளை கேட்டறிந்து, இதற்கான தீர்வினை தாம் பெற்றுத் தருவோம் என்று உறுதியளித்துவிட்டுச் சென்றுள்ளனர்.

குறித்த போராட்டத்தை திருகோணமலை பசுமை இயக்கம் ஏற்பாடு செய்திருந்ததோடு, சம்பூர் பகுதியைச் சேர்ந்த மக்கள் இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

SHARE