சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு சென்ற நிலையில் அங்கிருந்து நாடு கடத்தப்பட்ட ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கட்டுநாயக்க பிரிவு அதிகாரிகள் குழு இந்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் சட்டவிரோதமான படகு மூலம் அவுஸ்திரேலியா சென்றிந்தார். அங்கு அந்நாட்டு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
26 வயதான இந்த நபர் அம்பகந்தவில பிரதேசத்தை சேர்ந்தவர் என குற்றப் புலனாய்வு திணைக்கள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.