பிரசன்ன ரணதுங்க தனது அரசியல் எதிர்காலம் குறித்து 6ம் திகதி அறிவிப்பார்!

279

நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தனது அரசியல் எதிர்காலம் பற்றி எதிர்வரும் 6ம் திகதி அறிவிக்கவுள்ளார்.

மினுவன்கொட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளராக பிரசன்ன ரணதுங்க கடமையாற்றியிருந்தார்.

அண்மையில் கட்சியில் செய்யப்பட்ட மறுசீரமைப்புக்களுக்கு அமைய பிரசன்ன ரணதுங்க அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

கூட்டு எதிர்க்கட்சியின் அழைப்பாளராகவும் மஹிந்தவின் தீவிர ஆதரவாளராகவும் பிரசன்ன கருதப்படுகின்றார்.

எதிர்வரும் 6ம் திகதி விசேட ஊடகசந்திப்பொன்றை நடாத்த உள்ளார்.

கம்பஹாவில் நடைபெறவுள்ள இந்த விசேட ஊடக சந்திப்பில் அவரது ஆதரவாளர்கள் பங்கேற்க உள்ளனர்.

கடந்த 29ம் திகதி பிரசன்ன ரணதுங்க தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு அவரது சகோதரர் ருவான் ரணதுங்க அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தார்.

அரசாங்கத்தையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை மற்றும் நிர்வாகத்தையும் நேரடியாக பிரசன்ன ரணதுங்க விமர்சனம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

1556494832prasanna-ranathunga2

SHARE