உள்ளுராட்சி தேர்தலை நடத்த முடியாவிட்டால் அது குறித்து தேர்தல் ஆணைக்குழு விளக்கம் அளிக்க வேண்டும்

302

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாவிட்டால் அது குறித்து தேர்தல் ஆணைக்குழு விளக்கம் அளிக்க வேண்டுமென பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

உரிய நேரத்தில் எதற்காக தேர்தலை நடத்த முடியவில்லை என்பதனை தேர்தல்குழு விளக்கம் அளிக்க வேண்டுமென கம்மன்பில சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பற்றி அமைச்சர் பைசர் முஸ்தபா பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்

தேர்தல்களை நடாத்தவே தேர்தல் ஆணைக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. மாறாக தேர்தலை நிறுத்துவதற்காக அல்ல.

தேர்தலை நடாத்த முடியாவிட்டால் தேர்தல் ஆணைக்குழுவும் பொலிஸ் ஆணைக்குழுவைப் போன்று பயனற்றதாக மாறிவிடும் என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

udaya kamanpila 7ds

SHARE