நாடாளுமன்றை அரசியல் அமைப்புப் பேரiவாயக மாற்றும் யோசனையை ஏற்றுக் கொள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.
இந்த மாதம் 9ம் திகதி அரசாங்கம் நாடாளுமன்றை அரசியல் அமைப்புப் பேரவையாக மாற்றும் யோசனையை முன்வைக்க உள்ளது.
நேற்றைய தினம் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்றிரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
அரசாங்கத்தின் யோசனையை ஏற்றுக் கொள்வதென மத்திய செயற்குழுத் தீர்மானித்துள்ளதாக கட்சியின் பொருளாளர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கு மேலதிகமாக கட்சியின் மறுசீரமைப்பு, எதிர்கால தேர்தல் நடவடிக்கைகள், வேட்பாளர் தெரிவு, முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநயாக்கவின் நூறாவது சிரார்த்த தினத்தை கொண்டாடுதல் போன்ற விடயங்கள் பற்றி பேசப்பட்டதாக அவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.