கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நடந்த ஒரு விபத்தின் போது, மட்டக்களப்பு – திருமலை பிரதான வீதியில் உள்ள மின்கம்பம் உடைந்த நிலையில் இருந்தும், இதுவரையில் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்க வில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
குறித்த மின்கம்பத்திற்கு அருகாமையில், சிறுவர்கள் பாலர் பாடசாலை மற்றும் சிறுவர்கள், பெண்கள் என அதிக மக்கள் நடமாடும் பிரதான வீதியிலேயே இவ்வாறு காணப்படுகின்றது .
“சேதங்கள் ஏற்பட முன் சீர் செய்யுங்கள்” என கிழக்கு மாகாண மின்சார சபை அதிகாரிகளின் கவனத்திற்கு மக்கள் கொண்டுவந்துள்ளனர்.
இது குறித்து மட்டக்களப்பு மின்சார சபை எந்த விதமான கவனமும் எடுக்காதது ஏன்? என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளதோடு கவலை தெரிவிக்கின்றனர்.