சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அம்பாறையில் தேசிய மகளிர் தின வைபவங்கள்

288

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தலைமையில் அம்பாறையில் தேசிய மகளிர் தின வைபவங்கள் இன்று நடைபெறவுள்ளது.

மார்ச் மாதம் எட்டாம் திகதி சர்வதேச மகளிர் தினமாகும். இதனை முன்னிட்டு இலங்கையிலும் வருடந்தோறும் மார்ச் மாதம் எட்டாம் திகதி தேசிய மகளிர் தின வைபவங்கள் நடைபெறுவது வழக்கமாகும்.

இவ்வருட தேசிய மகளிர் தின வைபவங்கள் இன்று அம்பாறை எச்.எம்.வீரசிங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இந்த நிகழ்வின் அதிதிகளாக கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இன்றைய மகளிர் தின வைபத்தின் ஊடாக இலங்கையில் பெண்களின் முன்னேற்றம் குறித்த எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பான புதிய செயற்திட்டங்கள் பலவும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE